ஓசூர் தேர்பேட்டை அரசு குடியிருப்பு பகுதிக்கு பின்புறம், சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலுக்கு செல்லும் தார் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக ஏராளமான பக்தர்கள் இரு சக்கர வாகனங்களில் கோவிலுக்கு சென்று வருகின்றனர். மேலும் சாலை குறுகலாக உள்ளதால் திடீரென இறக்கத்தில் வாகனங்கள் வரும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், ஓசூர்.