நாமக்கல் பஸ் நிலையம் முதல் உழவர் சந்தை வரை உள்ள பூங்கா சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். போக்குவரத்து நிறைந்த இந்த சாலையை சீரமைப்பு செய்யப்பட வேண்டும். முக்கிய சுப தினங்களில் கோட்டை சாலையில் நிகழும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.