சங்கராபுரம்-நெடுமானூர் சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலையில் உள்ள பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி கீழே விழுந்து காயம் அடைந்து வரும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.