வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும்

Update: 2023-02-26 17:42 GMT
மூங்கில்துறைப்பட்டு அருகே அத்தியூர் வழியாக திருவரங்கம் செல்லும் சாலையில் உள்ள இளையனார்குப்பம் மற்றும் செம்படை ஆகிய ஊர்களில் வேகத்தடையில் வர்ணம் பூசப்படாமலும், எச்சரிக்கை பலகை இல்லாமலும் உள்ளது. இதனால் இரவில் வேகத்தடை இருப்பது தெரியாமல், அதில் ஏறி, இறங்கும் போது வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் உள்ள அனைத்து வேகத்தடைகளிலும் வெள்ளைநிற வர்ணம் பூச வேண்டும்.

மேலும் செய்திகள்