சாலை பணி விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2023-02-22 14:48 GMT


மன்னார்குடி செல்லும் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஆமை வேகத்தில் நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விடுகின்றனர். மேலும் புழுதி காற்றும் வீசுவதால் அந்த பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள்,திருவாரூர்

மேலும் செய்திகள்