திருவாரூரில் இருந்து கூத்தாநல்லூர் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இருட்டில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து விடுகின்றனர் . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், கூத்தாநல்லூர்.