புதுப்பிக்க வேண்டிய சாலை

Update: 2023-02-15 17:15 GMT

நாமக்கல் 12-வது வார்டு மெயின் ரோட்டில் உள்ள தேவேந்திரபுரம் சாலை அமைத்து 12 ஆண்டுகள் ஆகிறது. இதனால் சாலை சேதமடைந்து மண் சாலையாக மாறிவிட்டது. மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து புதிதாக சாலை அமைக்க முன் வருவார்களா?

-ஜெகன், நாமக்கல்.

மேலும் செய்திகள்