புழுதி பறக்கும் சாலை

Update: 2023-02-15 16:35 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் வெங்கடதாம்பட்டியில் இருந்து புதூர் செல்லும் சாலை வழியாக பெருமாள் குப்பம், படப்பள்ளி, அம்பேத்கர் நகர், கஞ்சனூர், புதுக்காடு ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தினமும் சென்று வர வேண்டும். இந்த சாலை குண்டும், குழியுமாக படுமோசமான நிலையில் உள்ளது. மேலும் கார், வேன் செல்லும் போது சாலையில் புழுதி பறந்து மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. அதிகாரிகள் சாலையை உடனே சீரமைக்க வேண்டும்.

-கண்ணாயிரம், வெங்கடதாம்பட்டி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்