சாலையில் பெரிய பள்ளம்

Update: 2023-02-15 16:34 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர்-காரக்குப்பம் செல்லும் சாலையில் காரக்குப்பம் என்ற இடத்தில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் கடந்த 6 மாதங்களாக தார் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பெரிய பள்ளம் ஏற்பட்டு அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தார் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கருணாகரன், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்