சீரமைக்க வேண்டிய சாலை

Update: 2023-02-12 17:26 GMT

சேலம் அனைமேடு ெரயில்வே கேட் முதல் பொன்னமாப்பேட்டை ெரயில்வே கேட், வாய்க்கால்பட்டரை வரை உள்ள பிரதான சாலையில் குடிநீர் குழாய் சீரமைப்பு மற்றும் கேபிள் பதிப்பு போன்ற பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டன. அவை மூடப்பட்டு சாலை முறையாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வெங்கடேஷ், ஜெ.பொன்னமாப்பேட்டை, சேலம்.

மேலும் செய்திகள்