திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், தொப்பம்பட்டி ஊராட்சியை சேர்ந்த ஆளிபட்டியில் இருந்து மணப்பாறை செல்லும் கிராம சாலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர். இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், கர்ப்பிணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.