குண்டும், குழியுமான சாலை

Update: 2022-07-19 17:30 GMT

திருச்சி மாவட்டம், தொட்டியம் ஒன்றியம் காட்டுப்புத்தூர் அருகே சீத்தப்பட்டி ஊராட்சி காக்காவரி பாலத்தில் இருந்து கருக்கமடை வரை செல்லும் தார்சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சீத்தப்பட்டி கணபதிபாளையம் கருக்கமடை கிராமங்களில் இருந்து வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்