நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே பச்சுடையாம் பாளையம் கிராம சாலையில் பல இடங்களில் ஜல்லி கற்கள் பெயர்ந்து சாலை குண்டும், குழியுமாக உள்ளன. இந்த சாலை வழியாக பள்ளி மாணவர்கள் சைக்கிளில் செல்லும்போது பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இரண்டு சக்கர வாகனங்களில் விவசாயிகள் விலை பொருட்களை கொண்டு செல்லும்போது பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மேலும் இரண்டு சக்கர வாகனங்களும் பழுதாகி விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைத்து பொதுமக்கள் பயனடையச் செய்ய வேண்டும்.
-விஜயன், ராசிபுரம், நாமக்கல்.