குண்டும், குழியுமான சாலை

Update: 2023-02-08 14:51 GMT

பெங்களூரு ரிச்ம்ண்ட் சர்க்கிள் அருகே, அங்குள்ள போக்குவரத்து சிக்னலில் இருந்து டபுள் ரோட்டுக்கு செல்லும் சாலை மிகவும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கிறார்கள். இதன்காரணமாக அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவசர நேரத்தில் அந்த சாலையை கடந்து செல்ல மட்டும் குறைந்தது 15 நிமிடத்திற்கு மேல் ஆவதாக கூறப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகிறார்கள். அந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்