சாலை பள்ளம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-02-08 14:49 GMT

பெங்களூரு ராஜாஜிநகர் 5-வது பிளாக் ராம் மந்திர் மைதானம் அருகே அரசு தொழில் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. அதன் முன்புறம் செல்லும் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதை போலீசாரோ, மாநகராட்சி அதிகாரிகளோ யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் அப்பகுதியில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் குழியின் மேலே ஒரு டயரை போட்டு வைத்துள்ளனர். அங்கு அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலை பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்