நாமக்கல் மாவட்டம் ராசிபரம் அருகே உள்ள பெரப்பஞ்சோலை ஊராட்சி மாவார் கிராமம்தான் மாவட்டத்தின் எல்லை முடிவு. அங்கு பெரியாறு என்று சுவேத நதி ஓடுகிறது. இந்த பாலம் கட்டப்பட்ட சில ஆண்டுகளில் பாலத்தின் கான்கிரீட் கம்பிகள் தெரியும் அளவிற்கு சேதம் அடைந்துள்ளது. இந்த பாலம் வழியாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மக்கள் சேலம் மாட்டத்தில் உள்ள தம்மம்பட்டி பகுதிக்கு சென்று வருகின்றனர். பாலத்தின் நடுவே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே இந்த பாலத்தை வெகுவிரைவில் சிரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.