கூடலூர் சிவசண்முக நகரில் 50 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய பட்டா நிலத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பள்ளத்தாக்கான இடம் என்பதால் இதுவரை சாலை அமைக்கவில்லை. நடைபாதைகளை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் நோயாளிகள், கர்ப்பிணிகளை ஆஸ்பத்திரிக்கு தூக்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சாலை அமைத்து தர நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.