நாமக்கல் போதுபட்டியில் இருந்து நல்லிபாளையம் வரை உள்ள முக்கிய சாலையில் கனரக வாகனங்கள், பஸ்கள், இரு சக்கர வாகனங்கள் அதிகமாக செல்கிறது. இந்த சாலை நாமக்கல் நகருக்குள் வாகனங்கள் நுழையாமல் இருக்க பயன்படுகிறது. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.