கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியை அடுத்த பேரிகை செல்லும் சாலையில் கொத்தகிருஷ்ணபள்ளி, நேரலகிரி, பண்ணப்பள்ளி மற்றும் பல இடங்களில் சாலையில் சில பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டன. பின்பு சாலையை முறையாக மூடாமல் விட்டுவிட்டனர். தற்போது இந்த சாலையில் வரும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே உடனடியாக இந்த குழிகளை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேஷ், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.