கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தர்மபுரி- திருப்பத்தூர் 2 மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலை போச்சம்பள்ளி பஸ் நிலையத்தை ஒட்டி செல்கிறது. போச்சம்பள்ளியில் உள்ள தாலுகா அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி, ரேஷன் கடைகளுக்கு செல்ல பொது மக்கள் இந்த சாலையை கடந்து செல்ல வேண்டும். ஆனால் அங்கு வேகத்தடை மற்றும் சாலையை கடக்கும் வெள்ளை கோடுகள் இல்லை. இதனால் அப்பகுதியில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் வேகத்தடை மற்றும் சாலையை கடக்கும் வெள்ளை கோடுகள் வரைய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?
-ஆறுமுகம், போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி.