குண்டும், குழியுமான சாலை

Update: 2023-01-29 13:21 GMT

பந்தலூர் அருகே மழவன் சேரம்பாடியில் இருந்து காவயல் செல்லும் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. மழைக்காலத்தில் அந்த சாலையில் செல்லவே முடியாத நிலை தொடர்கிறது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்