தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பொன்னவராயன்கோட்டையில் ஸ்ரீமான் நாடிமுத்து பிள்ளை சாலை, புதிய வீட்டு வசதி வாரிய பிரதான சாலை, கல்லறை தெரு சாலை,போஸ்ட் ஆபிஸ் சாலை ஆகியவை சேதமடைந்து குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். மேலும், குண்டும், குழியுமான சாலையினால் மேற்கண்ட பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.