தேனி கே.ஆர்.ஆர். நகரில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையில் சாக்கடை கடந்து செல்ல குழாய் பதிக்கப்பட்டது. இதற்காக சாலையில் குழி தோண்டப்பட்டது. குழாய் பதிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் சாலையை சீரமைக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பரிதவித்து வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?