சேறும், சகதியுமான சாலை

Update: 2023-01-22 12:43 GMT

பந்தலூர் அருகே பன்னிக்கல் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து ஏலமன்னா பகுதிக்கு மண் சாலை செல்கிறது. அதுவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் மழைக்காலத்தில் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைகின்றனர். எனவே மண்சாலையை மாற்றி தார்சாலை அமைத்து கொடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்