ஆபத்தான பள்ளம் மூடப்படுமா?

Update: 2023-01-22 10:19 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் தலையாரித்தெரு அருகே ஆஸ்பத்திரி சாலை உள்ளது. இந்த சாலையில் நீண்ட நாட்களாக பெரிய பள்ளம் ஒன்று மூடப்படாமல் உள்ளது. பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மூக்கை மூடியபடி சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பள்ளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.



மேலும் செய்திகள்