நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் மருதூர் வடக்கு மஞ்சக்கண்ணி சிவன்கோவில் அருகே தாணிக்கோட்டகம் இணைப்புச்சாலை உள்ளது. இந்த சாலை வழியாகத்தான் அருகில் உள்ள பள்ளிக்கூடம் மற்றும் அங்கன்வாடி மையத்திற்கு செல்ல வேண்டும். மேலும் இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். இதனால் சாலையை கடக்க மாணவ-மாணவிகள், மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த சாலையில் தகுந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மருதூர் வடக்கு.