இயங்காத சிக்னல்
திருப்பூர் சந்தைப்பேட்டை அருகில் உள்ள சிக்னல் இயங்காத காரணத்தால் சந்தைப்பேட்டையில் வாகன நெரிசல் ஏற்படுவதோடு சந்தைப்பேட்டையில் இருந்து வெளியே வரும் வாகனங்களும், வெள்ளியங்காட்டில் இருந்து வரும் வாகனங்களும், பல்லடத்தில் இருந்து திருப்பூர் செல்லும் வாகனங்களும், திருப்பூர் பஸ் நிலையத்திலிருந்து கோவை நோக்கி செல்லும் வாகனங்களும் முறையான சிக்னல் இல்லாத காரணத்தினால் வாகன ஓட்டிகள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகின்றனர். ஆகவே சிக்னல் முறையாக இயங்கினால் விபத்துகளை தவிர்க்கலாம்.இதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பார்வையிட்டு சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
மணிகண்டன்,பல்லடம்
9578441037