நாமக்கல் மாவட்டம் காவிரி ஆற்றின் மீது இரண்டு பாலங்கள் உள்ளன. பஸ்கள், லாரிகள் செல்லும்போது பாலத்தின் நடுவில் சேரும் மணல் சாலையில் குவிகின்றது. இதனால் பஸ்கள் செல்லும் போது இரு சக்கர வாகனத்தில் செல்வோர் பாலத்தில் ஒதுங்கும்போது மணல் மேல் சென்று சரிந்து கீழே விழும் அபாயம் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. நெடுஞ்சாலைத் துறையினர் காவிரி ஆற்றின் மீது உள்ள இரண்டு பாலத்திலும் மணலை சுத்தம் செய்ய வேண்டும் என்பது இருசக்கர வாகனத்தில் செல்பவர்களின் எதிர்பார்ப்பு.
-மணி, நாமக்கல்.