சாலையில் ஆபத்தான பள்ளங்கள்

Update: 2023-01-11 16:46 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் அஞ்செட்டி சாலையில் சீனிவாச மகால் அருகே ஒகேனக்கல் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு சாலையை தோண்டி குழாய் உடைப்பை அதிகாரிகள் சீரமைத்தனர். ஆனால் உடைப்பு சரியாக சீரமைக்காத காரணத்தால் தண்ணீர் தற்போதும் சாலையில் வழிந்தோடுகிறது. அத்துடன் சாலை தோண்டிய இடத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். சாலையில் ஏற்பட்டுள்ள ஆபத்தான பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பிரபா, கிருஷ்ணகிரி. 

மேலும் செய்திகள்