சேலம் கிச்சிப்பாளையத்தில் பேச்சி அம்மன் கோவில் பகுதியில் இருந்து பட்டை கோவில் வரை செல்லும் சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த சாலையில் வாகனத்தில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். அந்த பகுதியில் நாய் தொல்லையும் அதிகமாக உள்ளது. எனவே இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.