மோகனூர் அருகே மாடகாசம்பட்டி ஊராட்சியில் இருந்து தோளூர் செல்லும் சாலை ஓரத்தில் தோண்டப்பட்ட ஒரு குழி தார் சாலையை ஒட்டியவாறு உள்ளது. தற்போது மழை பெய்ததால் புற்கள், செடிகள் முளைத்துள்ளதால் ரோட்டில் செல்பவர்களுக்கு குழியிருப்பது தெரியவதில்லை. நீண்ட நாட்களாக மூடப்படாமல் உள்ளது. இந்த சாலையில் போக்குவரத்து அதிகமாக உள்ள நிலையில் சம்பந்தப்பட்ட துறையினர் குழியை மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேஷ் கண்ணன், கே.புதுப்பாளையம், நாமக்கல்.