பந்தலூர் அருகே அத்திசால் பகுதியில் சாலையோரத்தில் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் அந்த பகுதியே காடு சூழ்ந்தது போல் காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக நடந்து செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சம் அடைகின்றனர். காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் நின்றால் கூட தெரிவது இ்ல்லை. மேலும் எதிரே வரும் வாகனங்களை காண முடியாததால், விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே முட்புதர்களை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.