குண்டும், குழியுமான சாலை

Update: 2022-07-18 16:37 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் சிந்தகம்பள்ளி கிராமத்தில் உள்ளது நாரலப்பள்ளி பஞ்சாயத்து. இந்த பகுதியில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது இந்த பகுதியில் மழை பெய்ததால் இந்த சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் சாலையில் சாக்கடை கழிவுநீரும் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இந்த வழியாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் செல்ல முடியாத நிலை உள்ளது. தினமும் இந்த சாலையில் விபத்துகள் ஏற்படுகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குண்டும் குழியுமான சாலையை சரி செய்து தரவேண்டு்ம்.

மேலும் செய்திகள்