நாகை பஸ் நிலையம், ரெயில்நிலையம், கடைத்தெருவில் ஆங்காங்கே போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகனங்கள் மாடுகள் மீது மோதி விபத்து ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களையும் மாடுகள் தள்ளிவிடுகின்றன. இதன்காரணமாக வாகனங்கள் சேதமடைகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள்,நாகை