திருவாரூர்-மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் சேந்தமங்கலம் வண்டாம் பாளை, கங்களாஞ்சேரி, சுரக்குடி, ஆகிய பகுதிகளில் தனியார் தொலைத்தொடர்புநிறுவனத்தால் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அந்த குழிகளை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் சேந்தமங்கமலம்