தூத்துக்குடி துறைமுகம் செல்லும் சாலையில் புதிய பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால், அருகில் அமைக்கப்பட்ட சர்வீஸ் ரோடு வழியாகத்தான் அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. இந்த சர்வீஸ் ரோடு குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி வாகன விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த சர்வீஸ் ரோட்டை உடனே சீரமைப்பதுடன் பாலம் அமைக்கும் பணிகளையும் விரைந்து நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.