குண்டும்,குழியுமான சாலை

Update: 2022-12-25 10:53 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பொன்னவராயன்கோட்டை புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கு செல்லும் சாலை பராமரிப்பின்றி உள்ளது. இதன்காரணமாக சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், குண்டும்,குழியுமான சாலையினால் விபத்துகளும் அடிக்கடி நடக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்