சாலையில் வளர்ந்துள்ள செடி-புற்கள்

Update: 2022-12-21 15:05 GMT

திருமருகல் ஒன்றியம் கொட்டாரக்குடி-நல்லுக்குடி இடையே சாலை உள்ளது. இந்த சாலை வழியாக கொட்டாரக்குடி நல்லுகுடி பகுதிகளை சேர்ந்த மக்கள் அன்றாட தேவைகளுக்கு சென்று வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த சாலை தற்போது உரிய பராமரிப்பின்றி ஜல்லி, கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. மேலும் சாலையில் செடிகள், புற்கள் வளர்ந்து சாலை இருக்கும் இடமே தெரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை அமைக்கவேண்டும்.

மேலும் செய்திகள்