தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் கைகாட்டி பஸ் நிறுத்தம் உள்ளது. இதன் அருகே முத்துப்பேட்டை சாலையும், ராஜாமடம் வாய்க்காலும் சந்திக்கும் இடத்தில் பள்ளம் ஒன்று உள்ளது. இந்த பள்ளத்தினால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் பள்ளம் இருப்பதை அறியாமல் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள ஆபத்தான பள்ளத்தை மூட நடவடிக்கை எடுப்பார்களா?