கிருஷ்ணகிரி மாவட்டம் காட்டிநாயனபள்ளி முருகன் கோவில் அருகில் முருகர் நகர் 1, 2, 3 தெருவில் சுமார் 500 குடும்பங்கள் உள்ளன. ஆனால் போதிய ரோடு வசதி மற்றும் கால்வாய் வசதியோ இல்லாமல் அவதிப்படுகின்றனர். மழைக்காலங்களில் அந்த பகுதி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவாடிக்கை எடுக்கும்படி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளர்.
-த.சரவணன், முருகர் நகர் 2-வது தெரு, கிருஷ்ணகிரி.