கிருஷ்ணகிரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் ஊத்தங்கரை அம்பேத்கர் நகர் பகுதியில் எந்தவிதமான எச்சரிக்கை பலகையும் இல்லாமல் 2 வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் வரும் இரு சக்கர வாகனங்கள், லாரி மற்றும் பஸ்கள் திடீரென பிரேக் போடுவதால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் விபத்துகளில் சிக்கி காயமடைகின்றனர். எனவே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேகத்தடை அருகே எச்சரிக்கை பலகை வைக்க நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அண்ணாதுரை, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.