சாலை நடுவே ஆபத்தான பள்ளங்கள்

Update: 2022-12-11 11:39 GMT

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பூண்டி செங்கரையூர் சாலையில் ஆங்காங்கே சாலை நடுவே பள்ளங்கள் உள்ளன. மழைக்காலங்களின் போது இந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் பள்ளத்தினால் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். இதன்காரணமாக அந்த வழியாக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலை நடுவே உள்ள ஆபத்தான பள்ளங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.



மேலும் செய்திகள்