குண்டும், குழியுமான சாலை

Update: 2022-12-07 17:03 GMT

நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் உள்ளது சிங்கிலிபட்டி கிராமம். இங்கிருந்து வகுரம்பட்டி செல்லும் தார் சாலை 1½ கிலோ மீட்டர் தொலைவிற்கு குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் பொதுமக்களும், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும், முதியோர்களும், கூலி வேலைக்கு செல்பவர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-விஜயன், சிங்கிலிபட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்