கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேன்கனிக்கோட்டை சாலையில் ரெயில் பாலம் அருகே சாலையின் நடுவில் பெரிய பள்ளம் உள்ளது. இந்த சாலையில் தினமும் ஏராளமான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த சாலை, எப்போதும் பரபரப்புடன் காணப்படும். சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவலிங்கம், ஓசூர்.