தஞ்சை வெள்ளைபிள்ளையார் கோவில் ரவுண்டானா அருகில் தற்காலிக மீன்மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட் அருகில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகளை விரட்டி செல்கின்றன. இதனால் பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் சாலையில் நடந்து சென்று வருகின்றனர். மார்க்கெட்டில் இருந்து வெளியேற்றப்படும் மீன் கழிவுகளை திண்பதற்காக நாய்கள் சாலையின் குறுக்கே செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும், இருசக்கர வாகனங்கள், கார்களை துரத்தி செல்கின்றன. எனவே பொதுமக்கள், வாகனஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?