பழனி காமராஜ் நகரில் பொள்ளாச்சி சாலை-தாராபுரம் சாலை சந்திப்பு வளைவு பகுதியில் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அங்கு வாகன விபத்துகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. குறிப்பாக வளைவில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் பள்ளம் தெரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் வருவோர் விபத்தில் சிக்குகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட 2 விபத்துகள் ஏற்பட்டதில் ஒருவர் பலியாகி உள்ளார். எனினும் வளைவு பகுதியை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பாதுகாப்பு கருதி அங்கு சாலையை சீரமைக்க வேண்டும்.