நாமக்கல்லை அடுத்த முதலைப்பட்டி மேம்பாலம் அருகே சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் 2 சக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழும் அபாய நிலை உள்ளது. இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.