பந்தலூர் அருகே கோட்டப்பாடியில் இருந்து மழவன் சேரம்பாடிக்கு சாலை செல்கிறது. இந்த சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் விவசாய விளைபொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நின்று விடுகின்றன. எனவே அந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.