கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி முன்பு ஹெல்த்கேம்ப் பகுதிக்கு திரும்பும் இணைப்பு சாலையில் குறிப்பிட்ட இடங்களில் மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் காலை, மாலை நேரத்தில் பள்ளிக்கூடங்களுக்கு வரும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். சில நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே சாலையில் பழுதடைந்து கிடக்கும் இடங்களில் சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.