மதுரை மாவட்டம் செல்லூர் குலமங்கலம் ரோடு சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் வளர்ந்து இருப்பதால் பஸ்சில் செல்லும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே குண்டும்-குழியுமான இந்த சாலையை சரிசெய்யவும், சாலையோரத்தில் வளர்ந்துள்ள முட்புதர்களை வெட்டி அகற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?